டொலர் நெருக்கடி இன்றோடு முடிவுக்கு வரும் என ஆளுநர் நம்பிக்கை ..!

by Editor News

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனைப் பெறுவதன் மூலம், இலங்கை மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கான அனுமதி கிடைத்தால் டொலர் நெருக்கடி முடிவுக்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு போதுமான வெளிநாட்டு கையிருப்புக்கள் இலங்கையிடம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் முதலீடுகள் கிடைத்தால் புதிய வெளிநாட்டு நிதிகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளுக்கான புதிய அணுகுமுறைகள் இலங்கைக்கு கிடைக்கும் என்றும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment