ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி- இந்தியா படுதோல்வி

by Editor News

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

டாஸ் என்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்ற போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடாமல் இருந்த கேப்டன் ரோஹித் சர்மா இன்று மீண்டும் களமிறங்கினார்.

பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் மிச்சல் ஸ்டார்க் அடுத்தடுத்து விக்கெட் எடுத்து தள்ளினார். ரோஹித் சர்மா 13 ரன்களிலும்,கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார்.கடந்த போட்டியில் கலக்கிய ராகுலும் 9 ரன்களில் ஸ்டார்க் பந்துக்கு இரையாகினார். இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 31 ரன்களும், அக்சர் பட்டேல் 29 ரன்களும் எடுத்தனர்.26 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் மிச்சல் ஸ்டார்க் அதிகபட்சமாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

118 என்ற எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி வெறும் 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்களை எடுத்தது அபார வெற்றி பெற்றது. மிச்சல் மார்ஸ் 66 ரன்களுடனும்,டிராவிஸ் ஹெட் 51 ரன்களுடனும் எடுத்து இதுவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1 – 1 என சமனில் உள்ள நிலையில், வரும் 22ஆம் தேதி கடைசி போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.

Related Posts

Leave a Comment