தினம் ஒரு திருமந்திரம் – திருமந்திரம் – பாடல் #1678: ஆறாம் தந்திரம் – 12.

by Editor News

சிவ வேடம் (உண்மையான அடியவரின் வேடமே சிவ வேடம் ஆதல்)

மயலற் றிருளற்று மாமன மற்றுக்
கயலுற்ற கண்ணிதன் கைப்பிணக் கற்றுத்
தயவற் றவரோடுந் தாமே தாமாகிச்
செயலற் றிருந்தார் சிவவேடத் தாரே.

விளக்கம்:

மாயையாகிய மயக்கம் இல்லாமல், ஆணவம் கன்மம் ஆகிய மலங்கள் இல்லாமல், வலிமையான எண்ணங்களுடைய மனம் இல்லாமல், எப்போதும் விழிப்போடு இருக்கின்ற கண்களை பெற்று இருந்தாலும் அந்த கண்களில் காணும் காட்சியின் தொடர்போ அந்த காட்சியினால் செயல்படும் ஆற்றலின் தொடர்போ இல்லாமல், எவ்வித குணங்களும் இல்லாத இறைவனோடு சேர்ந்து தாமும் இறைவனைப் போலவே ஆகி எந்தவிதமான செயல்களும் இல்லாமல் இருப்பவர்களே உண்மையான சிவ வேடத்தைக் கொண்ட ஞானிகள் ஆவார்கள்.

Related Posts

Leave a Comment