தேவையான பொருட்கள் :
பிரெட் – 5 துண்டு,
பெரிய வெங்காயம் – 2,
பச்சை மிளகாய் – 4,
உப்பு – தேவையான அளவு,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை,
காய்கறி – கால் கப்.
செய்முறை :
ஒரு வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
சீரகத்தை கொரகொரப்பாக பொடித்துகொள்ளவும்.
காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்ஸியில் பிரெட் துண்டுகளை பிய்த்து பிய்த்து போட்டு அதனுடன் பெரிய வெங்காயம், 4 பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள், சீரகம், கடலை மாவு, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்துஅதில் பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து நன்கு கெட்டியாக உருண்டை பிடிக்கும் அளவிற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பக்கோடா மாவு பதம் வந்த பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மீடியம் பிளேமில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக பக்கோடா மாவை எடுத்து போட்டு எல்லா பக்கமும் பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுக்க வேண்டும்.
ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த பிரெட் பக்கோடா எண்ணெய் குடிக்காது.
சாதாரண வெங்காய பக்கோடாவை விட கூடுதல் சுவையுடன் நிச்சயம் இருக்கும்.
சட்டென ஐந்தே நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த பிரட் பக்கோடா டொமேட்டோ சாஸ் உடன் தொட்டு கொண்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.
மாலையில் டீயுடன் சாப்பிடலாம் வயிறு நிறைவாக இருக்கும்.