காலில் பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?

by Editor News

காலில் பித்தவெடிப்பு வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதை தற்போது பார்ப்போம்.

காலில் செருப்பு அணியாமல் கரடு முரடான பாதையில் நடப்பவர்களுக்கு காலில் பித்த வெடிப்பு வருவது வழக்கம். மேலும் அழுக்கு தேய்த்து குளிக்காமல் இருப்பது, குதிகாலில் அழுக்கு சேர்வது போன்ற காரணத்தினாலும் பித்தவெடிப்பு வரலாம்.

அதுமட்டுமின்றி நீண்ட நேரம் தரமற்ற செருப்பு மற்றும் ஷூக்களை பயன்படுத்துவது கால்களை சுத்தமாக கழுவாமல் இருப்பது ஆகியவை காரணமாகவும் பித்தவெடிப்பு வரலாம்.

இந்த நிலையில் வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் கால்களை நன்றாக கழுவ வேண்டும், குளிக்கும்போது கால்களுக்கு தனி கவனம் செலுத்தி நன்றாக கழுவ வேண்டும் ,வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும், கீரை பயறு மற்றும் பழ வகைகளை சாப்பிட வேண்டும். இதை எல்லாம் தொடர்ந்து செய்தால் காலில் உள்ள பித்தவெடிப்பு படிப்படியாக மறைந்து விடும். இதற்கு மேலும் காலில் பித்த வெடிப்பு தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்

Related Posts

Leave a Comment