மூக்கிலுள்ள கரும்புள்ளிகள் முக அழகை கெடுக்கின்றதா?

by Editor News

முகம் அழகாக இருந்தாலும் இந்த மூக்கின் மேல் உள்ள கரும்புள்ளிகளும் சொரசொரப்புத் தன்மையும் முக அழகையே கெடுத்துவிடுகின்றன என்று புலம்புவர்கள் அநேகர் உண்டு. காரணம், ஒருவரின் அழகை வெளிக்கொணர்வதில் மூக்கிற்கு பெரும் பங்கு உண்டு.

அதனால் தான் அழகிய மூக்கை கிளி மூக்கு என்று வர்ணிக்கிறார்கள். சரி இப்போது மூக்கின் மேல் உள்ள கரும்புள்ளிகளையும் சொரசொரப்புத் தன்மையையும் எவ்வாறு நீக்கலாம் என்று பார்ப்போம்…

குறிப்பு 1 – எலுமிச்சை சாற்றுடன் பட்டைத் தூளைச் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, மூக்கில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, ஸ்க்ரப் செய்து, பின்னர் கழுவினால் கரும்புள்ளிகள் நீங்கும்.

குறிப்பு 2 – தேனையும் முட்டையின் வெள்ளைக் கருவையும் சேர்த்து கலந்து முகத்தில் தடவி தேய்த்தால் நல்ல பலனைக் காணலாம்.

குறிப்பு 3 – தயிருடன் ஓட்ஸை சேர்த்து கலந்து முகத்தில் தேய்த்து கழுவினால் முகத்திலுள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

குறிப்பு 4 – கடலை மாவை ரோஸ் வோட்டருடன் சேர்த்து கலந்து பேஸ்ட் போல் தயாரித்து மூக்கின் மேல் தடவி மசாஜ் செய்தால் கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

குறிப்பு 5 – சீனியுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போன்று ஒரு கலவையை தயாரித்து மூக்கின் மேல் தடவி மசாஜ் செய்தால் கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

Related Posts

Leave a Comment