டி.பி.கஜேந்திரன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

by Editor News

மறைந்த இயக்குநர் டி.பி.கஜேந்திரன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவருக்கு வயது 68. திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன், பிரபல இயக்குநர்கள் கே. பாலசந்தர், விசு, ராம நாராயணன் உள்ளிட்டோரிடம் 60க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இதனை தொடர்ந்து, எங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாதன் உள்ளிட்ட பல வெற்றி படங்களையும் இயக்கியுள்ளார். இதேபோல் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலக வாழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில வயது மூப்பு காரணமாக இயக்குநர் டி.பி.கஜேந்திரன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இன்று காலை காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டிபி கஜேந்திரன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இயக்குநர் டி.பி.கஜேந்திரனை உடலுக்கு முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Related Posts

Leave a Comment