திருச்சி நவலூர் குட்டப்பட்டில் ஜல்லிக்கட்டு: 700 காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு …

by Editor News

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் பொங்கலையொட்டி நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் மற்றும் 450 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த 700 காளைகள், 450 மாடுபிடி வீரர் கலந்து கொண்டனர். இந்த போட்டியை ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் முதல் காளையாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டன.

இதனை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை, இளைஞர்கள் தீரமுடன் அடக்க முயன்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்க்ள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள், கட்டில், சைக்கிள், தென்னங்கன்று உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

Related Posts

Leave a Comment