பொங்கல் திருநாளின் கடைசி நிகழ்வாக நாளை காணும் பொங்கல் கொண்டாட இருப்பதை அடுத்து சென்னையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
* உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலை அருகில் மக்கள் கூட்டம் மிக அதிகமாகும்போது, வடக்கிலிருந்து வரும் வாகனங்கள் பாரிமுனை – முத்துசாமி பாயினட் – வாலாஜா பாயின்ட் – அண்ணாசாலை பெரியார் சிலை – அண்ணாசிலை – வெல்லிங்டன் பாயின்ட் – ஸ்பென்சர் சந்திப்பு – பட்டுளாஸ் சாலை – மணி கூண்டு – GRH பாயின்ட் வழியாக டாகடர் ராதாகிருஷ்ணன் சாலை சென்று, தங்களது இலக்கினை அடையலாம்.
* அடையாறிலிருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில், திருப்பப்பட்டு பாரதி சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்களது இலக்கினை அடையலாம்.
* மேலும் பாரதி சாலையானது கண்ணகி சிலையிலிருந்து ஒருவழிப் பாதையாகவும், வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு வாகனங்கள் செல்ல தடை செய்தும் பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு நோக்கி வாகனங்கள் அனுமதிக்கவும் செய்யப்பட்டுள்ளது .
* பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல தடைசெய்தும், வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.