சமையல் அறையை சுத்தமாக வைக்க ஈஸியான சில டிப்ஸ்!

by Editor News

சமையல் அறையில் பல அழுக்குகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்கள் சமையல் அறையை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள சில குறிப்புகளை தெரிந்துக் கொள்ளலாம்.

1. சமையல் அறையில் பாத்திரங்கள் கழுவும் ‘சிங்க்’ எப்போதும் தண்ணீர் படும் இடம் என்பதால், பாசியும் அழுக்கும் படிந்திருக்கும். இதனால், ஒருவித நாற்றமும் கிளம்பும். இதைப் போக்க சிங்க் சுவர்களில், கிளீனரை ஊற்றி நன்றாகத் தேய்த்துக் கழுவவும்.

2. அதன் பின் ஒரு நாப்தலின் உருண்டையை சிங்கினுள் போட்டு வைத்தால் கரப்பான் போன்ற பூச்சித் தொல்லையை தவிர்க்க முடியும்.

3. சமையல் அறைக் குப்பைக் கூடையை சிங்கிற்கு கீழ் வைக்கலாம். மூடும் வசதியுடைய கூடை நல்லது. இந்தக் குப்பைக் கூடையில் இருந்து கிளம்பும் நாற்றத்தைத் தடுக்க ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடாவைக் கொட்டி, கூடைக்குப் பக்கத்திலேயே வைப்பது பலன் தரும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பேக்கிங் சோடாவை மாற்றினால் போதும்.

4.பாத்திரம் துலக்கப் பயன்படுத்தும் ஸ்பான்ச், கிருமிகள் தங்கும் இடம். அதன் ஒரு சதுர இன்ச் பரப்பிலேயே லட்சத்துக்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் குடியிருக்கும். ஸ்பான்ச்சில் உள்ள ஈரப்பதத்தால் வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று வலியை உருவாக்கும் கிருமிகள் அதில் உருவாகலாம்.

5. இதைத் தவிர்க்க வாரம் ஒருமுறை இந்த ஸ்பான்ச்சை மாற்றிவிட வேண்டும். அல்லது ப்ளீச்சிங் தூள் கலந்த வெந்நீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து அலசி எடுத்தால், கிருமிகள் ஒழிந்துவிடும்.

6. கேஸ் அடுப்பை எண்ணெய் பிசுக்கு இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க அடுப்பிலும் சமையல் மேடையிலும் திரவ சோப்பை ஊற்றி நன்கு தேய்த்து ஊறவிட வேண்டும். அதன் பின் தண்ணீர் ஊற்றி சுத்தமாகத் துடைத்தால், அடுப்பு, மேடை இரண்டுமே பளிச்சென்று ஆகிவிடும்.

7. சமையல் மேடையின் எண்ணெய் பிசுக்கை போக்க கடலைமாவுடன் தண்ணீர் சேர்த்து சில நிமிடங்கள் ஊற வைத்து கழுவினால் பிசுக்கு போகும்.

8.சாப்பாடு செய்தவுடன், சமையல் அறையை மட்டுமல்ல, ஒவ்வொரு உணவையும் தயாரித்த பிறகு கேஸ் அடுப்பையும் சுத்தம் செய்வது நல்லது. இது கிருமிகள் அல்லது நோய்த்தொற்றுகள் பரவும் அபாயத்தைக் குறைத்து, எல்லா நேரங்களிலும் நல்ல தூய்மை மற்றும் சுகாதாரத்தை பராமரிக்க உதவும்.

Related Posts

Leave a Comment