இனிக்கும் கரும்பில் இத்தனை நன்மைகளா ..

by Editor News

கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து, காசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், ஸிங்க், தையாமின், ரிபோபிளவின் , புரதம் என உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன.

கரும்பு இல்லாமல் பொங்கல் பண்டிகையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. தித்திக்கும் கரும்பு போல் வாழ்க்கையும் இன்பமாக அமைய வேண்டும் என்பதன் குறியீடுதான் கரும்பு. அது வாழ்க்கையை மட்டுமல்ல உங்கள் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் என்பது தெரியுமா..? அதன் நன்மைகள் இதோ..

கரும்பு நன்மைகள் :

கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து, காசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், ஸிங்க், தையாமின், ரிபோபிளவின் , புரதம் என உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன.

ஆற்றலை அதிகரிக்கும் :

நீங்கள் சோர்வாக இருக்கும்போது ஒரு துண்டு கரும்பு சாப்பிட்டுப் பாருங்கள். உடனே சுறுசுறுப்பாகிவிடுவீர்கள். ஏனெனில் இதன் இனிப்பு சுவை காரணாமாக அதன் சாறு உங்கள் செயல் திறனை அதிகரிக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி தானாக கிடைக்கும்.

எலும்பு மற்றும் பற்களுக்கு வலிமை :

கரும்பில் கால்சியம், மெக்னீசியம் சத்துக்கள் நிறைவாக இருப்பதால் பற்கள் மற்ற்ய்ம் எலும்புகளுக்கு வலிமை கிடைக்கிறது.

மன அழுத்தம் குறையும் :

கரும்பில் அதிகமாக பொட்டாசியம் இருப்பதால் மன அழுத்தத்தை ஊக்குவிக்கும் ஹார்மோன் சுரப்பு கடுப்படுத்தப்படுகிறது. அதுமட்டுமன்றி கரும்பை கடித்து மெல்லும்போது ஸ்ட்ரெஸ் பஸ்ட்ராகவும் இருக்கும் என்பதால் உங்கள் மன அழுத்தம் தானாக பறந்து போகும்.

புற்றுநோய் வராமல் தடுக்கிறது :

கரும்பு அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஃபிளவனோய்டுகள் இருப்பதால் புற்றுநோய் செல்களை ஆரம்பத்திலேயே எதிர்த்துப் போராட உதவுகிறது.

சிறுநீரகத்திற்கு நல்லது :

கரும்பில் பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவில் சோடியம் இருக்கிறது. எனவே இது சிறுநீரகத்தில் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. எனவே சிறுநீரகப் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும் :

கரும்பில் அதிகமாக எலக்ட்ரோலைட்ஸ் இருப்பதால் கல்லீரல் ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது.

வயதான தோற்றத்தை தாமத்தப்படுத்தும் :

கரும்பில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமாக இருப்பதால் சருமத்தின் ஆரோக்கியத்தை தக்க வைக்க உதவுகிறது. இதனால் சருமச் சுருக்கங்கள், சரும பாதிப்புகள் இன்றி வயதான தோற்றத்தையும் தாமதப்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் :

கரும்பில் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்திக்கு வலு கிடைக்கிறது. எனவே நோய் தொற்றுகளிலிருந்து தற்காத்துக்கொள்ள கரும்பும் நல்ல மருந்து.

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது :

கரும்பில் பொட்டாசியம் சத்து நிறைவாக இருப்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே உங்களுக்கு கரும்பு பிடிக்கும் எனில் தினம் ஒன்று என சாப்பிடுங்கள். இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம்.

Related Posts

Leave a Comment