296
பெருங்காயத்தை கடவுளின் அமிர்தம் என்று நமது முன்னோர்கள் அழைத்து வந்த நிலையில் இந்த பெருங்காயம் வைரஸை எதிர்த்து போரிடும் தன்மை கொண்டது என்றும் தெரிவித்துள்ளனர் .
ஒரு கிளாஸ் மோரில் பெருங்காயம் போட்டு பருகினால் உடல் குளிர்ச்சி அடையும் என்றும் வாயுவை அதிகரிக்க கூடிய வாழைக்காய் உள்ளிட்ட பொருள்களை சமைக்கும் போது பெருங்காயம் சேர்த்து சமைத்தால் வாயுவை கட்டுப்படுத்தும் என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
பெருங்காயம் ரத்தத்தை சூடாக்கி நரம்புகளை வெப்பப்படுத்தும் என்றும் குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் நோய்க்கு பெருங்காயம் நல்ல மருந்து என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தாயின் மார்பில் பெருங்காயத்தை தடவி குழந்தைகளுக்கு பால் கொடுத்தால் குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக வளரும் என்றும் கூறப்படுகிறது.