உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை – ருவன் விஜேவர்த்தன

by Editor News

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த தேர்தலுக்கு முகம்கொடுப்பது தொடர்பாக தற்போது கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியின் முகாமைத்துவ குழு ஏனைய கட்சிகளுடன் இதுதொடர்பாக கலந்துரையாடி வருகின்றது எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்த்தன கூறியுள்ளார்.

அந்த வகையில் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் கலந்துரையாடியுள்ளதுடன், ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேர்தல் போட்டியிடுவது தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர், தேரதலில் எவ்வாறு போட்டியிடுவது என தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த தீர்மானம் கட்சியின் செயற்குழுவில் விடப்பட்டு, செயற்குழு அனுமதி வழங்கிய பின்னரே ஐக்கிய தேசிய கட்சி தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்ற தீர்மானம் நாட்டுக்கும் கட்சி ஆதரவாளர்களுக்கும் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு ஐக்கியமாக ஒன்றாக பயணிப்பதே தங்களது நோக்கம் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment