தமிழகத்தில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் தோசை என்றால் மிகவும் பிடிக்கும். தோசையில் பல வகைகள் உண்டு. கல் தோசை, வெங்காயத் தோசை, ரவா தோசை, பொடி தோசை, முட்டை தோசை, கோதுமை தோசை, மசாலா தோசையென அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வகையில் மசாலா தோசை தென்னிந்திய உணவில் மிகவும் பிரபலம். இந்த பதிவில் மசாலா தோசையை எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையானவை
தோசை மாவு – தேவைக்கேற்ப
உருளைக்கிழங்கு – 3
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
சீரகம் – ½ டீஸ்பூன்
கடுகு – ¼ டீஸ்பூன்
பூண்டு – 5
கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் – 3
இஞ்சி பெரிய துண்டு – 1
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
வெங்காயம் – 2
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
நெய் – 1 டீஸ்பூன்
மசாலா செய்முறை
1. முதலில் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
2. பின்பு இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை ஒன்றாக இடித்து அதில் சேர்த்து வதக்கவும்.
3. இப்போது கறிவேப்பிலை மற்றும் நீளவாக்கில் வெட்டிய வெங்காயத்தையும் சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்கவும்.
4. பின்பு அதில் சிறிதளவு பெருங்காயத்தூள், மஞ்சள் துள் மற்றும் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும்.
5. தேவைக்கேற்ப உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். உருளைக்கிழங்கு மசாலா நன்கு வெந்து வந்தவும் மேலே கொத்தமல்லி தூவி இறக்கி விட வேண்டும். இப்போது மசாலா ரெடி..
மசாலா தோசை செய்முறை
1. முதலில் அடுப்பில் தோசை கல்லை வைத்துச் சூடுப்படுத்தவும். பின்பு ஒரு கரண்டி தோசை தோசையை ஊற்றி அதன் மேல் நெய்யை சேர்க்கவும்.
2. இப்போது தயார் செய்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை தோசை மேல் வைத்து, அதை தோசையைச் சுற்றி பரப்பி விட வேண்டும்.
3. தோசையை ஒருபக்கம் மட்டும் நன்கு முறுகலாக வேக வைத்து எடுத்தால் சுவையான ஹோட்டல் ஸ்டைல் மசாலா தோசை ரெடி..