ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற வாரிசுடு படத்தின் பிரஸ்மீட்டில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தில் ராஜு அதன் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதை அறிவித்தார்.
நடிகர் விஜய்யின் 66-வது திரைப்படம் வாரிசு. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் இவர், தமிழில் தயாரித்துள்ள முதல் படம் இதுவாகும். இப்படத்தில் விஜய்யுடன் சரத்குமார், ஷியாம், விடிவி கணேஷ், சதீஷ், ராஷ்மிகா, குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா, பிரகாஷ் ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி 11-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்திற்கான ரிலீஸ் பணிகள் ஒருபக்கம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தெலுங்கில் வாரிசுடு என்கிற பெயரிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். அங்கு சிரஞ்சீவியின் வால்டர் வீரைய்யா மற்றும் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய படங்களுக்கு போட்டியாக இப்படம் ரிலீசாக உள்ளது.
முதலில் இப்படத்தை தெலுங்கிலும் ஜனவரி 11-ந் தேதி ரிலீஸ் செய்வதாக இருந்தனர். ஆனால் ரிலீசுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், வாரிசுடு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அதன்படி வாரிசுடு திரைப்படம் வருகிற ஜனவரி 14-ந் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தமிழில் திட்டமிட்டபடி ஜனவரி 11-ந் தேதி வாரிசு படம் ரிலீசாகும் என்பதையும் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற வாரிசுடு படத்தின் பிரஸ்மீட்டில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தில் ராஜு இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த தேதி மாற்றத்திற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. போதுமான் திரையரங்குகள் கிடைக்காததன் காரணமாகவே வாரிசுடு ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு இருக்கலாம் என டோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.