இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்காட்டக்காரராக களம் இறங்கிய இசான் கிசன் ஒரு ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளிக்க, அடுத்து வந்த ராகுல் திரிபாதி அதிரடியாக ஆடினார். 16 பந்துகளை சந்தித்த அவர், 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து சூரியகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக ஆடிய சூரியகுமார் யாதவ் 45 பந்துகளில் சதம் அடித்த அசத்தினார். சர்வதேச டி20 அரங்கில் அவர் அடிக்கும் 3வது சதம் இதுவாகும்.சுப்மன் கில் 46 ரன்னிலும், சூரியகுமார் யாதவ் 112 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது.
229 எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி தொடக்கம் முதலே தடுமாறியது. இதனால் அந்த அணி 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .ஏற்கனவே நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றன. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் தொடாரை 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.