நாட்டின் எரிபொருள் தேவை குறிப்பிடத்தக்க சதவீதத்தால் குறைவடைந்துள்ளது !

by Editor News

நாட்டின் எரிபொருள் தேவை குறிப்பிடத்தக்க சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், ஆண்டு இறுதிக்குள் எரிபொருள் தேவை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி, நுகர்வு கணிசமான அளவு குறைவு, QR முறைப்படி மாத்திரம் எரிபொருளை விடுவித்தல், எரிபொருள் இருப்புக்களை பராமரிக்க நுகர்வோர்கள் முயற்சி எடுக்காதது உள்ளிட்ட பல காரணங்களால் எரிபொருளின் தேவை குறைந்துள்ளது.

முன்னதாக மாதாந்தம் சுமார் 4 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோல் மற்றும் டீசல் தேவை இருந்த நிலையில் தற்போது அது 2 ஆயிரம் மெற்றிக் தொன்களாக குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் முதல் ஜூலை வரையிலான 4 மாத காலத்தில் தினசரி டீசல் பயன்பாடு 6 ஆயிரத்து 496 லிருந்து 2 ஆயிரத்து 299 தொன்னாகவும், பெற்றோல் பயன்பாடு 3 ஆயிரத்திலிருந்து 764 லிருந்து ஆயிரத்து 226 தொன்னாகவும் குறைந்துள்ளது.

அதனுடன் ஒப்பிடும் போது, ​​வருட இறுதியில் நாட்டில் எரிபொருளுக்கான தேவை மேலும் குறைந்துள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தற்போது இலாபம் ஈட்டியுள்ளதுடன், உலக சந்தையில் எரிபொருள் விலையும் கணிசமான அளவு குறைந்துள்ளது.

இலங்கையில் உரிய எரிபொருள் விலை குறைப்புடன் ஒப்பிடும் போது ஒரு லீற்றர் எரிபொருளின் விலையை 50 முதல் 100 ரூபா வரை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் வினவிய போது, இந்த நாட்டில் எரிபொருட்களின் விலைகள் விலை சூத்திரத்தின் பிரகாரம் தீர்மானிக்கப்படுவதாகவும், இதுவரையில் எரிபொருள் விலையை திருத்தும் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment