155
சமீபத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 14% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று உள்ளதாகவும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆசிரியர் தகுதி தேர்வு என்ற டெட் தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 233 எழுதினர். ஆனால் இந்த தேர்வில் வெறும் 21 ஆயிரத்து 543 பேர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
சமீபத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணியில் நீடிக்க முடியும் என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து இந்த தேர்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .