சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 464 குறைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதில் ஆச்சரியமில்லை.. பொதுவாகவே தங்கம் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுவது போன்று தோன்றலாம்.. ஆனால் இந்தியாவில் தங்கம் தொடர்ந்து விலை உயர்வை சந்தித்து வருகிறது என்பதில் மாற்றமில்லை.. திடீரென ஒரு நாளில் தங்கம் விலை உச்சம் பெறும்.. அதன்பின்னர் தொடர்ந்து அதிலிருந்து கொஞ்சம் விலை சரிவதும், மீண்டும் உயர்வதும், சரிவதும் என மக்களை அந்த விலைக்கு பழக்கி விடும்..
அப்படித்தான், மெல்ல மெல்ல தங்கத்தின் விலை உயர்வை மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி ஆகிவிடுகிறது. உதாரணமாக அண்மையில் தங்கம் விலை ரூ. 40 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து ரூ. 40 ஆயிரம் முதல் ரூ.41 ஆயிரத்திற்கும் இடையில் மாறி மாறி ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அடுத்த ஆண்டு தங்கம் விலை 41 ஆயிரத்தை எட்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கு அடித்தளமாகவே அண்மைக்காலமாக தங்கம் விலை இருந்து வருகிறது.
அந்தவகையில் நேற்று சென்னையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 5,124க்கும், ஒரு சவரன் ரூ.40,992க்கும் விற்பனையாகிறது. இந்நிலையில் இன்று ஒரு தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.464 சரிந்துள்ளது. அதன்படி இன்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,066-க்கும், ஒரு சவரன் ரூ.40,528-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ரூ1 குறைந்து , ஒரு கிராம் வெள்ளி ரூ. 73.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.