சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலை அடைய செய்துள்ளது – WHO ..

by Editor News

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலை அடைய செய்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறியுள்ளார்.

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த மே மாதத்தில் இருந்து சீனாவில் கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியது. கொரோனா பரவலின் தீவிரதத்தால் சீனாவில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது அங்கும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. பி எஃப் 7 வகை உருமாற்றம் காரணமாக சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறாது. சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் அண்டை நாடுகள் அச்சமடைய தொடங்கியுள்ளன.

இந்நிலையில், சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலை அடைய செய்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: உலகில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது. தற்போது சில நாடுகளில் திடீரென்று கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கி உள்ளது. சீனாவில் உள்ள நிலைமை கவலையளிக்கிறது. சீனாவின் கொரோனா பாதிப்பு பற்றிய விபரங்களை பகிர்ந்து ஆய்வுகள் செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தடுப்பூசி செலுத்துவதில் சீனா கவனம் செலுத்த வேண்டும். சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்ய உலக சுகாதார நிறுவனம் தயாராக உள்ளது. இவ்வாறு கூறினார்.

Related Posts

Leave a Comment