சப்பாத்தி சாண்ட்விச் ரெசிபி…

by Editor News

இது ஒரு ஃப்யூஷன் ரெசிப்பியாகும். சப்பாத்திகள், காய்கறிகள், மசாலாப் பொருட்கள் மற்றும் சில சாஸ்களை பயன்படுத்தி செய்யப்படும் சப்பாத்தி சாண்ட்விச்-ஐ ஸ்னாக்ஸாகவும் சாப்பிடலாம்.

காலை அல்லது மதியம் செய்த சப்பாத்தி மீந்து விட்டால் மீண்டும் அந்த சப்பாத்தியை இரவு தின்பதற்கு பலருக்கும் விருப்பம் இருக்காது. எஞ்சிய சப்பாத்தியை புதுமையான வழியில் வேறு ஒரு ரெசிப்பியாக தயார் செய்தால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

சப்பாத்தியை கொண்டு சப்பாத்தி சாண்ட்விச் தயார் செய்து சாப்பிடலாம். இது ஒரு ஃப்யூஷன் ரெசிப்பியாகும். சப்பாத்திகள், காய்கறிகள், மசாலாப் பொருட்கள் மற்றும் சில சாஸ்களை பயன்படுத்தி செய்யப்படும் சப்பாத்தி சாண்ட்விச்-ஐ ஸ்னாக்ஸாகவும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் கொடுக்க விரும்பினால் இந்த ரெசிபி சரியான தேர்வாக இருக்கும். நீங்கள் டயட்டில் இருப்பவர் என்றால் சப்பாத்தி சாண்ட்விச்சை இன்னும் சுவையாக மாற்ற சீஸிற்கு பதில் டயட் மயோனைஸை சேர்க்கலாம்.

சப்பாத்தி சாண்ட்விச் செய்ய தேவையான பொருட்கள்:

சப்பாத்திகள் – 4, கார்ன் – 1/4 கப், முட்டைக்கோஸ் – 1/2 கப், ட்ரை மேங்கோ பவுடர் – 1/2 டீஸ்பூன், ரெட் சில்லி பவுடர் – 1 டீஸ்பூன், மயோனைஸ் – 2 டேபிள்ஸ்பூன், பட்டர் – 2 டீஸ்பூன், வெங்காயம் – 1/2 கப், கேப்சிகம் (க்ரீன் பெப்பர்) -1/2 கப், வெஜிடபிள் ஆயில் – 1 டேபிள்ஸ்பூன், மல்லி தூள் – 1/2 டீஸ்பூன், டொமேட்டோ கெட்ச்அப் – 2 டேபிள்ஸ்பூன், சீஸ் க்யூப்ஸ் – 4 பீஸ், உப்பு – தேவைக்கேற்ப

சப்பாத்தி சாண்ட்விச் செய்வது எப்படி.?

– முதலில் கடாய் ஒன்றை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின் அதில் வெங்காயம், கேப்சிகம் மற்றும் கார்ன் சேர்த்து இவற்றை சில நிமிடங்கள் வதக்கவும்.

– இப்போது ட்ரை மேங்கோ பவுடர், மல்லி தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். கலவை உங்களுக்கு ட்ரையாக இருப்பது போல தோன்றினால் 2-3 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். கடைசியாக எடுத்து வைத்துள்ள முட்டைக்கோஸை சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும்.

– பின் இந்த காய்கறி கலவையில் தக்காளி கெட்ச்அப் மற்றும் மயோனைஸ் சேர்த்து மெதுவாக கலக்கவும்

– இப்போது எடுத்து வைத்திருக்கும் சப்பாத்திகளின் மீது மேலே ரெடியாகி இருக்கும் கலவையை பரப்பி சப்பாத்தி சாண்ட்விச்சை தயார் செய்ய துவங்குங்கள். அரை சப்பாத்தி முழுமைக்கும் இந்த கலவையை நன்றாக அப்ளை செய்து, மேலே சிறிது துருவிய சீஸ் சேர்த்து சப்பாத்தியை இரண்டாக மடித்து கொள்ளுங்கள்.

– இப்போது ஒரு Pan-ஐ எடுத்து கொண்டு அதில் சிறிது வெண்ணெய்யை சூடாக்கி நீங்கள் தயாரித்துள்ள சப்பாத்தி சாண்ட்விச்சை வைத்து இருபுறமும் பொன்னிறமாக மாறும் வரை குக் செய்யவும். பின் சப்பாத்தி சாண்ட்விச்சை இரண்டாக நறுக்கி பரிமாறவும்.

Related Posts

Leave a Comment