காரசாரமான சின்ன வெங்காய தொக்கு..!

by Editor News

மூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது .

சின்ன வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். இது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. அப்படிப்பட்ட இந்த சின்ன வெங்காயத்தில் தொக்கு செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:

1. சின்ன வெங்காயம்

2. உப்பு

3. புளி

4. மிளகாய் பொடி

5. கடுகு

6. மஞ்சள் பொடி

7. நல்லெண்ணெய்

செய்முறை:

1. முதலில் வெங்காயத்தை தோல் உரித்து கழுவிக் கொள்ளவும்.

2. பிறகு ஈரமில்லாமல் சுத்தமான துணியால் நன்கு துடைத்துக் கொள்ளவும்.

3. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, எண்ணெய் நன்கு காய்ந்த மாத்திரத்தில் வெங்காயத்தை பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.

4. ஆறிய பின்னர் புளி, உப்பு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து நைசாக அரைக்கவும்.

5. வாணலியில் மீதம் உள்ள எண்ணெயைக் காய விட்டு கடுகைப் போடவும்.

6. கடுகு நன்கு வெடித்த உடன் அரைத்த வெங்காய விழுதைப் போட்டுக் கிளறவும்.

7. நன்றாக சுருண்டு வந்தவுடன் இறக்கி ஆறவைத்து சுத்தமான பாட்டில்களில் அடைத்துப் பரிமாறவும்.

8. இப்போது சுவையான சின்ன வெங்காயத் தொக்கு ரெடி.

Related Posts

Leave a Comment