பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பொங்கல் பரிசு விநியோகம் குறித்து ஆலோசனை.
பொங்கல் பரிசு விநியோகம் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் பெரிய கருப்பன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். ஜனவரி முதல் வாரத்தில் வழங்கப்படும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பை அனைத்து ரேஷன் அட்டைதார்களும், அவர்களின் அருகில் உள்ள ரேஷன் கடைகளில் வாங்கி செல்வர்.
அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்புக்காக எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கின்றனர். வரும் பொங்கலுக்கு ரூ.1000 ரொக்கம், சர்க்கரை மற்றும் இதர பொருட்கள் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு விநியோகம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். எப்போது பொங்கல் பரிசை கொடுக்கத் தொடங்கலாம் தொடர்பான விவரங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.