159
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது.
வங்க கடலில் வடகிழக்கு பருவக்காற்று காரணமாக தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி வருகின்றன. இதனால் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
தற்போது வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு பகுதியில் நகர்ந்து இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.