ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அதன் அசத்தலான வசதிகள் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஒன்பிளஸ், சீனாவை சேர்ந்த எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் செல்போன்களுக்கு இந்தியா மட்டுமின்றி உலக அளவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியாவில் ஆப்பிள் போன்களுக்கு அடுத்தபடியாக ரிச் மொபைலாக ஒன்பிளஸ் கருதப்படுகிறது. ஒன் பிளஸ் செல்போன்களில் இதுவரை ஏராளமான மாடல்கள் வந்துள்ளன. இந்நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனினை அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி புது டெல்லியில் நடைபெற இருக்கும் “கிளவுட் 11” நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஒன்பிளஸ் 11 5ஜி சிறப்பம்சங்கள் :
ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனில் ஹேசில்பிலாட் பிராண்டிங் கொண்ட கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனில் 2K அல்லது குவாட் HD+ ஸ்கிரீன், இடது புறத்தில் பன்ச் ஹோல், UFS 4.0 ஸ்டோரேஜ், மெட்டல் ஃபிரேம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதேபோல் 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 32MP டெலிபோட்டோ சென்சார் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. 5000 எம்ஏஹெச் பேட்டரி, 100 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.