தமிழக அரசு கோரிய 90 லட்சம் டோஸ் கோமாரி நோய் தடுப்பூசியை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டிற்கு, தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் (கோமாரி நோய் மற்றும் கன்றுவீச்சு நோய்-National Animal Disease Control Programme- NADCP) கடந்த செப்டம்பர் 2022-ல் வழங்கவேண்டிய தடுப்பூசி ஒன்றிய அரசால் இதுநாள் வரையில் வழங்கப்படவில்லை.
இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதைத் தடுத்திடவும், அவற்றின் நோய் எதிர்ப்புச் சக்தியினைப் பராமரித்திடவும், இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பைத் தடுத்திடவும், தமிழ்நாடு அரசு கோரியுள்ள 90 இலட்சம் தடுப்பூசியினை விரைந்து வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவுக்கு இன்று (17-12-2022) கடிதம் எழுதியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Text of the D.O. Letter of Hon’ble Chief Minister of Tamil Nadu addressed to the Hon’ble Union Minister of Animal Husbandry, Dairying & Fisheries requesting to expedite the supply of FMD vaccine to Tamil Nadu.#CMMKSTALIN #TNDIPR@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/RtSvBCN4KB
— TN DIPR (@TNDIPRNEWS) December 17, 2022