தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.
இவர் தமிழ் உட்பட தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.
மேலும் இவர் ரஜினி, கமல், சரத்குமார் என பல முக்கிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இவரின் யதார்த்தமான நடிப்பால் பல கோடி ரசிகர்களை உலகம் முழுவதிலும் வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் மற்றும் அரசியல் என பல்கலை வித்துவனாக திகழ்ந்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில், இவரின் மூத்த சகோதரர் அபுபக்கர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகவும் கடந்த 4 நாட்களாக வெண்டிலேட்டரிலிருந்து வருகிறார்.
அவருக்கு நேற்று தான் அவரது உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டது.
அவருக்காக எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள்” என தன்னுடைய டுவிட்டர் பகுதியில் உருக்கமான பதிவொன்றை பதிவிட்டிருந்தார்.
சற்றுமுன் டுவிட்டர் பதிவு :
இதனை தொடர்ந்து இவர் காலமாகியுள்ளார் என்பதை தன்னுடைய டுவிட்டர் பகுதியில் வருத்ததுடன் தெரிவித்திருந்தார்.
அந்த பதிவில், “உங்கள் அன்புக்குரியவர்கள் எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அளவுக்கு, விடைபெறும் நேரமும் வரும். என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது.
அவருடைய அன்பும் வழிகாட்டுதலும் எப்போதும் எங்களோடு இருக்கும். மேலும் அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்கள் சொல்வது போல், வாழ்க்கையின் பயணம் கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது” என பதிவிட்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகவதுடன், இதனை பார்த்த பல பிரபலங்கள் குஷ்பூவிற்கு ஆறுதல் கூறியுள்ளார்கள்.
As much as you want your loved ones to be with you forever,time comes to say goodbye. My brother's journey has ended today. His love & guidance will always be us. I thank everyone who have prayed for him. As they say,the journey of life is decided by God. Rest in peace #Bhaijaan. pic.twitter.com/Ryh0AsaZRC
— KhushbuSundar (@khushsundar) December 17, 2022