சென்செக்ஸ் 145 புள்ளிகள் உயர்வு ..

by Editor News

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 145 புள்ளிகள் அதிகரித்தது.

கடந்த நவம்பரில் சில்லரை விலை மற்றும் மொத்த விலை பணவீக்கம் குறைந்தது மற்றும் சர்வதேச நிலவரங்கள் சாதமாக இருந்ததால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டெக் மகிந்திரா மற்றும் டாடா ஸ்டீல் உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், நெஸ்லே இந்தியா மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது .

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,036 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,494 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 147 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.291.21 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.1.21 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 144.61புள்ளிகள் உயர்ந்து 62,677.91 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 52.30 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,660.30 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment