தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மாண்டஸ் புயலின் தாக்கம் மறைவதற்குள் கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகளில் மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்று முதல் 17ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ,திருநெல்வேலி ,தென்காசி ,தூத்துக்குடி ,கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.