171
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் பெரும் சேதத்தை தமிழகத்திற்கு ஏற்படுத்திய நிலையில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார் .
அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலசந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் வடபகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் வடக்கு மற்றும் தெற்கு கடற்கரை வழியாக அரபுக் கடல் பகுதிகளுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.