திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ..

by Editor News

புயல் எச்சரிக்கை காரணமாக வேலூரை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தம் படிப்படியாக வலுப்பெற்று நேற்று இரவு 11.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. சென்னையிலிருந்து தென் கிழக்கு திசையில் 550 கி.மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு தென் கிழக்கு திசையில் 460 கி.மீட்டர் தொலைவிலும் மாண்டஸ் புயல் தற்போது நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், புதுவை, தெற்கு ஆந்திராவை ஒட்டி வரும். அதன்பின்னர், வெள்ளிக்கிழமை (டிச.9) புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையொட்டி தமிழ்நாட்டின் அநேக இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும். டெல்டா மாவட்டங்கள், கடலூர் மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர் , வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது. கனமழை எச்சரிக்கையால், ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில் இன்று (08.12.2022) மதியம் மற்றும் நாளை (09.12.2022) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிடுள்ளார். இந்நிலையில் தற்போது திருவள்ளூர் மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment