வேலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை .

by Editor News

புயல் எச்சரிக்கை காரணமாக வேலூரில் இன்று பிற்பகல் முதல் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக நிலவி வந்த நிலையில், நேற்று இரவு 11.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயலானது சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 500 கி.மீ. தொலைவிலும் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்த மாண்டஸ் புயல் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே நாளை கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது என்றும், புயலின் காரணமாக நாளை நள்ளிரவு முதல் காற்றின் வேகம் மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வட தமிழ்நாடு, வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறது.

புயலின் காரணமாக இன்று முதல் 10ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனையடுத்து கனமழை எச்சரிக்கையால், வேலூர் மாவட்டத்தில் இன்று (08.12.2022) மதியம் மற்றும் நாளை (09.12.2022) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிடுள்ளார்.

Related Posts

Leave a Comment