30 ஆண்டுகளில் முதல் புதிய பிரித்தானிய நிலக்கரி சுரங்கத்திற்கு மைக்கேல் கோவ் ஒப்புதல் அளித்துள்ளார்.
கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிபுணர்கள் மத்தியில் அதன் காலநிலை பாதிப்புகள் பற்றிய கவலைகள் இருந்தபோதிலும், இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கமானது காலநிலை இலக்குகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் கோக்கிங் நிலக்கரிக்கான தேவை குறைந்து வருவதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆனால், ஆதரவாளர்கள் வைட்ஹேவன் அருகே உள்ள சுரங்கம் வேலைகளை உருவாக்கும் மற்றும் நிலக்கரி இறக்குமதியின் தேவையை குறைக்கும் என்று கூறுகின்றனர்.
2020ஆம் ஆண்டில் உள்ளூர் கவுண்டி சபையில் ஆரம்பத்தில் சுரங்கத்திற்கு ஒப்புதல் அளித்த பிறகு வெஸ்ட் கும்ப்ரியா சுரங்கத் திட்டத்தின் எதிர்காலம், இரண்டு ஆண்டுகளாக சமநிலையில் இருந்தது.
அரசாங்கத்தின் காலநிலை மாற்ற ஆலோசகர் கார்பன் உமிழ்வை அதிகரிக்கும் என்று கூறியதை அடுத்து, கிளாஸ்கோவில் ஊழுP26 காலநிலை மாநாட்டிற்கு முன்னதாக, 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திட்டத்தின் ஒப்புதல் இடைநிறுத்தப்பட்டது.
சுரங்கம் மூலம் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியில் 85 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படும் என்று அரசாங்கத்தின் ஆலோசனைக் காலநிலை மாற்றக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.