வங்கதேசத்திற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி – இந்திய அணிக்கு 272 ரன்கள் இலக்கு ..

by Editor News

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் குவித்தது.

வங்கதேச நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வங்கதேச அணி போராடி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் முதலாவதாக பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து வங்கதேச அணி முதலாவதாக பேட்டிங் செய்த நிலையில், இந்திய அணி ஃபீல்டிங் செய்தது.

தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும் இறுதியில் சிறப்பாக விளையாடியது வங்கதேச அணி. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் வெளியேறிய நிலையில், 6வது வீரராக களமிறங்கிய மஹ்முதுல்லா 77 ரன்களும், 8வது வீரராக களமிறங்கிய மெகிடி ஹசன் மிராஸ் 100 ரன்களும் விளாசியதால் அணி நல்ல ஸ்கோரை எட்டியது. இறுதியாக வங்கதேச அணி அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் சேர்த்தது. இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். உம்ரான் மாலிக், முகமது சிராஜ் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கவுள்ளது.

Related Posts

Leave a Comment