யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் நிறுவப்பட்ட சுற்றுப் புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையம் இன்றைய தினம் (புதன்கிழமை) காலை 9 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் நிதியுதவியுடன், சுற்றுப் புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையம் யாழ்ப்பாணம் மாநகர சபையினால் நிறுவப்பட்டது.
இதன் நினைவுக்கல்லை யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் திறந்து வைத்ததுடன் காற்று தரக் கண்காணிப்பு நிலைய பொறிமுறையை சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்ஹ ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் , மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ் பத்திரகே, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் பி.ஹேமந்த ஜெயசிங்கே, உலக சுகாதார நிறுவனத்தினைச் சேர்ந்த கலாநிதி வேர்கிங் மல்லவராச்சி, யாழ் மாவட்ட மேலதிக செயலாளர் ம.பிரதீபன், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் து.சுபோகரன், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டிலீப் லியனகே,யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ் மாநகர ஆணையாளர் இ.த. ஜெயசீலன், மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.