155
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.