522
முகத்தின் அழகை கெடுக்கும் வகையில் தோன்றும் முகப்பருக்களை நீக்க என்ன செய்யலாம் என்பதை தற்போது பார்ப்போம்
நம் உடலில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் எண்ணையை சுரக்கும் போது வெளியேறும் வழியில் இருக்கும் தடை காரணமாக முகப்பெருக்கள் ஏற்படுகிறது
இந்த பருக்கள் நீங்குவதற்கு பருக்கள் உள்ள இடத்தில் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்தால் நாளடைவில் பருக்கள் மறைந்துவிடும். அதேபோல் எலுமிச்சம் சாறு எடுத்து அதனை தண்ணீரில் கலந்து பருக்களின் மேல் தடவி அரை மணி நேரம் கழித்து தண்ணீரால் கழுவினால் அடிப்படையாக முகப்பருக்கள் நீங்கும்.
குளிர்ந்த நீரில் அடிக்கடி முகத்தை நன்றாகக் கழுவினால் பருக்கள் தோன்றாமல் பாதுகாக்கலாம்.
எண்ணெய் பலகாரங்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைவாக சாப்பிட்டால் பருக்கள் உண்டாவதை தவிர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது