உலகளாவிய ரீதியில் 6G கனெக்டிவிட்டி சேவை அறிமுகப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகிறது.
கனெக்டிவிட்டி சேவை அறிமுகம்
இந்தியா உட்பட சில நாடுகளில் 5G கனெக்டிவிட்டி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சேவையானது கடந்த அக்டோபர் மாதம் முதல் இந்தியாவின் பிரதமரின் அனுமதியுடன் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 5G கனெக்டிவிட்டி சேவை மிக சிறப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது 6G கனெக்டிவிட்டி சேவைக்கான செயற்பாடுகளை சீனா ஆரம்பித்துள்ளது.
இந்த ஆராய்ச்சிகள் பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்டாலும் சீனா இதில் முதலிடத்தை பிடிக்கிறது.
மேலும் சீனாவிலுள்ள ஜெனெரஷன் வயர்லெஸ் டெக்னாலஜி சேவையில் இருக்கும் ZTE நிறுவனம் இது தொடர்பான ஐந்து ஆராய்ச்சிகளை முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது போன்று ஆராய்ச்சிகளை சில நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும் Nokiaமற்றும் Ericsson போன்ற நிறுவனங்கள் இந்த ஆராய்ச்சியை வெற்றிக்கரமாக நடத்திவருகிறது.
பொதுவாக தற்போது அறிமுகப்படுத்தியிருக்கும் 5G சேவையை விட ஆயிரம் மடங்கு வேகத்தை தரக்ககூடிய வகையில் உருவாக்கப்படுவதே 6G கனெக்டிவிட்டி சேவை.
இதனை ஆராய்ச்சி செய்வதற்கு சுமார் 8 வருடங்கள் வரைசெல்லும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சேவையைக் கொண்டு தானியங்கும் வாகனங்கள், புகையிரதங்கள் என்பவற்றை இயக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனை பெறுவதற்கு குறிப்பிட்டதொகையை நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.