200
இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கெடு நேற்றுடன் முடிவடைந்தது .
இந்த நிலையில் இந்த தேர்தலில் இந்தியாவின் தங்க மங்கை என்று அழைக்கப்படும் பிடி உஷா கடந்த 26ஆம் தேதி தனது விருப்பத்தை வெளியிட்டார். இதனை அடுத்து இந்த தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் பிடி உஷாவை தவிர வேறு யாருமே இந்த தேர்தலில் போட்டியிட வில்லை என்பதால் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக தங்க மங்கை பிடி உஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராகவும் பிடி உஷா மாறுகிறார் என்ற பெருமையும் அவருக்குக் கிடைக்கப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது .