மிஸ்டர் ஐபிஎல், சின்ன தல என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சுரேஷ் ரெய்னா உத்தரபிரதேச மாநிலம் கசியாபாத்தில் உள்ள முராத் நகரில் 1986 ம் ஆண்டு பிறந்தார். சிறு வயது முதலே கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், இந்திய அணிக்காக முதன் முதலில் 2005ம் ஆண்டும் இலங்கைக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்துவிதமான திறமைகளை கொண்ட சுரேஷ் ரெய்னா இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வந்தார். இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அதே நாளில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதனையடுத்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்தார். சென்னை அணிக்கு தோனி எப்படியோ அப்படி தான் ரெய்னாவும். சென்னை அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்தவர் ரெய்னா. இதன் காரணமாகவே மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்பட்டு வந்தார். சென்னை அணிக்கு பெரிய தல தோனி என்றால். சின்ன தல ரெய்னா என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வந்தனர். அவருக்கும் சிஎஸ்கேவுக்குமான உறவு என்பது வார்த்தைகளில் விவர்சிக்க முடியாத ஒன்றாக இருந்தது. குறிப்பாக தோனிக்கும் அவருக்குமான நெருக்கம் அனைவரும் அறிந்ததே. இவ்வளவு ஆண்டுகளாக அவரை சிஎஸ்கே அணி தக்கவைத்து வந்தது. ஆனால் கடந்த மூன்று சீசசன்களாக அவரின் ஃபார்ம் கேள்விக்குறியானதால் கடந்த சீசனில் அவர் சென்னை அணியில் இருந்து களட்டி விடப்பட்டார். சென்னை அணியை தவிர்த்து வேறு எந்த அணியும் அவரை வாங்க முன்வரவில்லை. இதனால் அவர் கடந்த சீசனில் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இருந்த போதிலும் ரசிகர்கள் ரெய்னாவின் வருகையை எதிர்ப்பார்த்து உள்ளனர்.
இந்நிலையில், சுரேஷ் ரெய்னா தனது 36வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதன் காரணாக அவருக்கு முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல் ரசிகர்களும் சுரேஷ் ரெய்னாவின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.