பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக செயற்கைக்கோள்களை வடிவமைத்து விண்ணில் ஏவுகிறது. இந்நிலையில், இஸ்ரோ சார்பில் பி. எஸ். எல். வி. சி 54 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் ஓசன் சாட் 3 என்கிற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் எட்டு சிறிய வகை நானோ செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் 960 கிலோ எடை கொண்ட ‘ஓசன்சாட்-03’ (இ.ஓ.எஸ்-06) என்ற புவியை கண்காணிக்கும் செயற்கைகோள் மற்றும் 8 நானோ செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது.
அவற்றில் இந்தியாவின் ஐ.என்.எஸ். 2பி, பிக்சல் இந்தியா நிறுவனத்தின் ஆனந்த் செயற்கைகோள், தைபோல்ட் 1, தைபோல்ட் 2 மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 4 ஆஸ்ட்ரோகாஸ்ட்-2 செயற்கைகோள்களும் அடங்கியுள்ளன. பி. எஸ். எல். வி. ராக்கெட்டில் இது 56வது திட்டப்பணி ஆகும். இதற்கான 25.30 மணிநேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.26 மணிக்கு தொடங்கிய நிலையில், இன்று காலை 11.56 மணிக்கு சரியாக விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட்டும், செயற்கைகோள்களும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Andhra Pradesh | PSLV-C54 takes off from Satish Dhawan Space Centre in Sriharikota. pic.twitter.com/lxsOccncTg
— ANI (@ANI) November 26, 2022