வீடுகளில் முதல்நாள் பரணி தீபம் ஏற்றுவார்கள். பரணி காளிக்குரிய நாளாகும். ஆதிநாளில் காளிதேவியை வழிபடும் நோக்கத்தில் பரணி தீபத்தைக் கொண்டாடினார்கள். இதனை பிள்ளையார் தீபம் என்றும் கூறுவர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வருகிற டிசம்பர் 6ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. 60 நாட்களுக்கு முன்பு இருந்தே விழா ஏற்பாடுகள் தொடங்கப்பட்டது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக இருப்பது திருவண்ணாமலை. இது தட்ஷிண கைலாயம் என்றும் பக்தர்களால் அழைக்கப்படும். இத்திருத்தலத்தில் சிவலிங்கமே மலையாக காட்சியளிப்பதாக ஐதீகம்.
திருக்கார்த்திகை தீபம்:
கார்த்திகை மாதம் என்றாலே நினைவுக்கு வருவது கார்த்திகை தீபத்தருநாள் தான். கார்த்திகை தீபத்தன்று வீடுகளில் மற்றும் கோவிலில் விளக்கேற்றி கொண்டாடுவார்கள். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் ஒன்றாக வரக்கூடிய நன்னாளில் திருக்கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது
உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும் பஞ்சபூத தளங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திக்கை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை நன்னாளில் திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டு இருக்கும். அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து மாலையில் மலை மேல் மகாதீபம் ஏற்றப்படும்.
அனைத்து சிவன் ஆலயங்கள் மற்றும் முருகன் ஆலயங்களிலும் சிறப்பாக கார்த்திகை தீபம் கொண்டாப்படும். மக்கள் வீடுகளிலும் தீபம் ஏற்றி வழிபடுவர்.
கார்த்திக்கை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் பரணி தீபம் , அண்ணா மலையார் தீபம் (மகா தீபம்) விஷ்ணு தீபம், நாட்டுக்கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என ஐந்து நாட்கள் தீபங்கள் ஏற்றப்படும்.
பரணி தீபம் என்றால் என்ன?
அதிகாலையில் பரணி தீபம் அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்டு, பின்னர் அர்த்த மண்டபத்தில் ஐந்து தீபங்களாக இவை காட்டப்படும். கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில் இந்த
தீபம் காட்டப்படுவதால் ‘பரணி தீபம்” என்று பெயர் பெற்றது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற சிவனின் ஐந்து அம்சங்களையும் காட்டும் விதமாகவே பரணி தீபம் காட்டப்படுகிறது. அதன் பின்னர், மாலை 6 மணி அளவில் திருவண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.
பாவங்களைப் போக்கும் பரணி தீபம் ( வீடுகளில் ஏற்றும் நாள் நேரம்) :
தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அகல திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி
நட்சத்திரத்தன்று இல்லம் எங்கும் மாலை விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட
வேண்டும்.
பரணி தீபம் ஏற்றும் நேரம் (கோவிகளில்)
திருகார்த்திகை அன்று காலை 4 மணியளவில், பரணி தீபம் ஏற்றப்படும். இந்த வருடம் கார்த்திகை தீபம் கார்த்திகை மாதம் 20ம் தேதி, டிசம்பர் 6ம் நாள் செவ்வாய் கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக, அன்று காலை 4 மணியளவில், பரணி தீபம் ஏற்றப்படும்.
தீபம் ஏற்றும் எண்ணிக்கை
வாசலில் 2 தீபமும், பூஜை அறையில் 5 தீபமும் ஏற்ற வேண்டும். இந்த 5 தீபங்களையும் வட்டமாக எல்லாம் திசையும் ஒளி படும் படி ஏற்ற வேண்டும். இந்த விளக்கில் நெய் ஊற்றி ஏற்றினால் சிறப்பு. திரி பஞ்சு திரிகளை பயன்படுத்தினாலே போதுமானது. பழைய விளக்குகளையும் சுத்தபடுத்தி ஏற்றலாம் தவறில்லை.
தீப பலன்கள் :
நமது வீட்டு பூஜையறையில் ஒரு முக தீபம் ஏற்றினால் மத்திம பலன் தரும். இரண்டு முக தீபம் ஏற்றினால் குடும்பம் ஒற்றுமை தரும். மூன்று முக தீபம் ஏற்றினால் புத்திர சுகம் தரும். நான்கு முக
தீபம் ஏற்றினால் பசு, பூமி சுகம் தரும். ஐந்து முக தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.
மண் விளக்குகளை வீட்டின் வாசல் படிகளிலும், உள்ளே உள்ள வாசல்களிலும் படிக்கு மூன்று வீதம் ஏற்றி வைப்பது மரபு. வீட்டில் நல்லெண்ணெயிலும், முருகன் முன்னிலையில் இலுப்பெண்ணெயிலும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் அஷ்டலட்சுமிகளும் வீட்டில் அடியெடுத்து வைப்பார்கள், ஐஸ்வர்யம் பெருகும்.