மீனாட்சி குடும்பத்துக்கு வந்த அடுத்த சிக்கல் …

by Editor News

மீனாட்சி குடும்பத்துக்கு வந்த அடுத்த சிக்கல், கார்த்திக்கு நடக்கும் கல்யாண ஏற்பாடு, நடந்தது என்ன என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் மீனாட்சி விடுதலையாகிறாள். ஃப்ளாஷ் பேக்கில், கார்த்திக்கிற்கு உதவியது வெற்றி என்பது தெரிகிறது. வெற்றி சங்கிலியை கண்டுபிடித்து கார்த்திக்கிடம் ஒப்படைத்து மீனாட்சியைக் காப்பாற்றுகிறான்.

அடுத்து கார்த்திக்கின் அம்மா கார்த்திக்கு தெரியாமல் அவனது கல்யாணத்துகு ஏற்பாடு செய்கிறாள். அவன் ஒத்துக்கொள்ள வில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்ட, அவனும் வேறு வழியில்லாமல் மணவறையில் அமர்கிறான். மேலும் யமுனாவுக்கு போனில் மெஸேஜ் அனுப்புகிறான் கார்த்திக். அதைப் பார்க்கும் துர்கா சக்தியிடம் அதைச் சொல்லப் போகிறாள். வழியில் செல்வாவைப் பார்க்க, செல்வாவிடம் சொல்கிறாள். கார்த்திக் கல்யாணத்தை நிப்பாட்டப் போகிறான் செல்வா.

அதன்பின் துர்கா சக்தியுடன் கல்யாணத்தை நிப்பாட்ட போகிறாள். சக்தி வருவதற்குள், செல்வா முகமூடி போட்டுக்கொண்டு கார்த்திக் கல்யாணத்தை நிப்பாட்டுகிறான். அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Related Posts

Leave a Comment