பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதன்முறையாக ஓபன் நாமினேஷன் நடத்தப்பட்டது. அதில் 6 ஆண் போட்டியாளர்கள் மற்றும் 1 பெண் போட்டியாளர் ஆகியோர் நாமினேஷன் லிஸ்ட்டில் சிக்கி உள்ளனர்.
சீசன் 6 நிகழ்ச்சி கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கப்பட்டது. வெற்றிகரமாக 40 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் இருந்து இதுவரை சாந்தி, அசல் கோளார், ஷெரினா, விஜே மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டு உள்ளனர். இதுதவிர ஜிபி முத்து இரண்டாவது வார இறுதியில் சொந்த காரணங்களுக்காக பாதியிலேயே வெளியேறினார்.
தற்போது 15 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளனர். பிக்பாஸ் வீட்டின் விதிப்படி ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் நடக்கும். அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற இரண்டு போட்டியாளர்களை காரணங்களுடன் நாமினேட் செய்ய வேண்டும். இதுவரை கன்பெஷன் ரூமில் நடத்தப்பட்டு வந்த நாமினேஷன், இந்த முறை ஓப்பனாக நடைபெற்றது.
வழக்கமாக மற்ற சீசன்களில் 50 நாட்களுக்கு மேல் தான் ஓபன் நாமினேஷன் நடத்தப்படும், ஆனால் இந்த முறை சீக்கிரமாகவே ஓபன் நாமினேஷன் நடத்தப்பட்டதால் போட்டியாளர்கள் ஷாக் ஆகினர். இந்த ஓபன் நாமினேஷனில் தனலட்சுமி, அசீம், மணிகண்டா ராஜேஷ், ராம், ராபர்ட், அமுதவாணன், கதிரவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் தேர்வான 7 பேரில் மணிகண்டா ராஜேஷ், தற்போது தான் முதன்முறையாக நாமினேஷனில் சிக்கி உள்ளார். கடந்த 6 வாரங்களாக நாமினேஷன் பட்டியலில் இடம்பெறாமல் தப்பித்து வந்த மணிகண்டாவை இந்த முறை பிளான் போட்டு மாட்டிவிட்டுள்ளனர். ஆனால் தற்போது வரை பதிவாகி உள்ள வாக்குகளின் படி மணிகண்டாவுக்கு தான் குறைவான வாக்குகள் கிடைத்துள்ளன. இதைப் பார்க்கும் போது முதன்முறை நாமினேஷனில் சிக்கிய மணிகண்டா தான் இந்த வாரம் வெளியேறுவார் போல தெரிகிறது. இவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.