135
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருவதை அடுத்து வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியது என்பதும் அதன் பின் அதில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி தற்போது கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தில் பெய்த மழை காரணமாக தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உள்ள நிலையில் தற்போது பெய்யும் மழை காரணமாக மேலும் நிரம்ப வாய்ப்புள்ளது.