தன்னுடன் வாழ்ந்து வந்த லிவ் இன் பார்ட்னர் ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்துக் கொன்று, 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்திருந்து 18 நாட்களாக அந்த 32 துண்டுகளையும் தினமும் எடுத்துச் சென்று அப்புறப்படுத்திய அப்தப்பின் செயல் டெல்லியில் மட்டுமல்லாது நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.
இதை அடுத்து உத்திரப்பிரதேசத்திலும் இப்படி ஒரு பயங்கரம் சம்பவம் நடந்திருக்கிறது . முன்னாள் காதலியை கழுத்தை நெரித்துக் கொன்று ஆறு துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பையில் அடைத்து கிணற்றில் வீசிய அந்த வாலிபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அசங்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரின்ஸ் யாதவ். இவர் இஷாக்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆராதனா என்கிற பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். ஆராதனா திடீரென்று வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு விட்டார். ஆனாலும் திருமணத்திற்கு பின்னரும் காதலன் பிரின்ஸ் உடன் தொடர்ந்து பழகி வந்திருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகும் தன்னுடன் பழகி வந்தாலும் தன்னை விட்டு இன்னொருவரை திருமணம் செய்து கொண்டதால் மிகுந்த ஆத்திரத்தில் இருந்திருக்கிறார் பிரின்ஸ். இதனால் அவர் ஆராதனாவை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார். திட்டமிட்டபடி கடந்த நவம்பர் 9ஆம் தேதி அன்று ஆராதனாவை கோவிலுக்கு செல்லலாம் என்று பைக்கில் அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு சென்றதும் உறவினர் சர்வேசின் உதவியுடன் கோவிலுக்கு அருகே இருந்த கரும்பு தோட்டத்திற்குள் ஆராதனாவை தூக்கிச் சென்றிருக்கிறார்.
அங்கு ஆராதனாவின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் உடலின் பாகங்களை 6 துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பையில் அடைத்து கிணற்றில் வீசி இருக்கிறார்.
இதன் பின்னர் நவம்பர் 15 ஆம் தேதி கிணற்றுக்கு அருகே நிர்வாணமாக பெண்ணின் உடல் இருப்பதைக் கண்டு போலீசருக்கு தகவல் தெரிய வர போலீசார் ஆராத னா சடலத்தை கைப்பற்றி ஆராதனாவை கொன்ற பிரின்சை கைது செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்ட பிரின்ஸ் யாதவவ்விடம் நாட்டு துப்பாக்கி , கூரிய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் பின்னர் விசாரணைக்காக கொலை நடந்த இடத்திற்கு பிரீன்சை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்போது போலீஸ் இடம் இருந்து தப்பிப்பதற்காக தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி எடுத்து சுட்டு இருக்கிறார். பதிலுக்கு போலீசார்ரும் துப்பாக்கி சூடு நடத்தியதில் பிரின்ஸ்க்கு படுகாயம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த சம்பவத்திற்கு பின்னர் பிரின்சுக்கு ஆராதனாவை கொல்ல உதவிய ஏழு பேரை ஏழு பேரை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் அவர்களை பிடிக்கவும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.