கோவில் கட்டிக்கொடுத்த விஜய் !

by Editor News

விஜய்யை காண வந்த ரசிகர் ஒருவர், அவர் தங்கள் கிராமத்திற்கு செய்த உதவி குறித்து பேசியுள்ள வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

தந்தையின் உதவியுடன் சினிமாவில் அறிமுகமானாலும், அதன்பின் விடா முயற்சியால் விஸ்வரூப வெற்றி கண்டவர் தான் நடிகர் விஜய். இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியதை அடுத்து அதன்மூலம் அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

நடிகர் விஜய் இன்று தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக ஏராளமான ரசிகர்கள் இன்று காலை முதலே சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தின் முன் திரண்டனர். அவர்களுக்கு மதிய உணவாக சுட சுட பிரியாணி போட்டு தடபுடல் விருந்து கொடுத்தார் விஜய்.

அந்த வகையில் விஜய்யை காண வந்த ரசிகர் ஒருவர், அவர் தங்கள் கிராமத்திற்கு செய்த உதவி குறித்து பேசியுள்ள வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியதாவது : “விஜய் அண்ணா எங்கள் ஊருக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். எங்க ஊரில் பெருமாள் கோவில் ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார். எங்கள் ஊர் மக்களுக்கு அன்னதானம் போட்டுள்ளார்.

ஒரு முறை எங்கள் ஊருக்கு வரமுடியுமா என கேட்டதற்கு என்ன ஊர் என கேட்டார். சிறுகூடல் கிராமம், அதற்கு பஸ் வசதியோ, சாலை வசதியோ கிடையாதுனு சொன்னோம். உடனடியாக நான் கண்டிப்பாக வருகிறேன் என சொன்னார். சொன்னபடியே ஒருநாள் வந்து அரை மணிநேரம் எங்கள் ஊரில் வந்து இருந்தார்.

சிவகூடல் என சொன்னால் விஜய் கிராமமா என சொல்லும் அளவுக்கு நிறைய பத்திரிகைகள் எங்கள் ஊருக்கு வந்திருக்கின்றன. முதன்முறையாக விஜய்க்கு கல்வெட்டு வச்சதும், சிலை வைத்ததும் எங்கள் கிராமத்தில் தான். எங்கள் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு விஜய் நடிச்ச படத்தின் பெயர் தான் பெரும்பாலும் வைப்பார்கள். கில்லி, மதுர, விஜய், தளபதி இந்த மாதிரி பெயர்களை தான் எங்களது குழந்தைகளுக்கு நாங்கள் வைத்து வருகிறோம்.” என நெகிழ்ச்சியுடன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

Related Posts

Leave a Comment