இன்று குரூப் -1 முதல் நிலை தேர்வு ..

by Editor News

இன்று குரூப்-1 முதல் நிலை தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் மூன்றரை லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதுகிறார்கள்.

துணை ஆட்சியர், வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டு துறை உதவி இயக்குநர் ஆகிய குரூப்- 1 பதவிகளில் இருக்கும் 92 காலியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருந்தது.

முதல் நிலை ,முதன்மை, நேர்முக தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் இதற்கு தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் முதல் நிலை தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது.

3,22,416 பேர் இந்த தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் இரண்டு பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி மூணு லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் இந்த தேர்வு எழுதுகிறார்கள்.

இன்று காலையில் 9:30 மணி அளவில் தேர்வு தொடங்குகிறது. பிற்பகல் 12:30 மணி வரையிலும் இந்த தேர்வு நடைபெறுகிறது. பொதுப்பாடத்தின் பிரிவில் 175 வினாக்களும், திறனறிவு பிரிவில் 25 வினாக்களும் 200 வினாக்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வினை எதிர்கொள்ளும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அது தொடர்பான விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவித்துள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Related Posts

Leave a Comment