மழைக்கு ஏற்ற ஸ்நாக்ஸ் …

by Editor News

வீட்டில் விசேசமா? யா? ஏதாவது ஈவினிங் ஸ்நாக்ஸ் சாப்பிடனும் னு தோணுதா? இதை அனைத்தையும் நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வடைக்கு உண்டு என்றே சொல்லலாம். ஈஸியாக வீட்டில் உள்ள உளுந்து அல்லது கடலை மாவு வெங்காயம் இருந்தால் நொடியில் நமக்குப் பிடித்த வடைகள் ரெடியாகிவிடும். அதிலும் மழைக்காலம் மற்றும் குளிர்காலம் என்றால் என்னென்ன வடைகளை செய்யலாம்? என நம்முடைய அம்மாக்கள் யோசிப்பது வழக்கமான ஒன்று. இதோ தென்னிந்தியா முதல் வட இந்தியா வரை ஒவ்வொரு மாநிலங்களிலும் விதவிதமான வடைகள் இருந்தாலும் இந்த 5 வடைகள் மிகவும் இந்தியர்களிடம் மிகவும் பிரபலமானது. இதோ உங்களுக்கான லிஸ்ட்..

மெது வடை:

தென்னிந்திய காலை உணவில் மெது வடை இல்லாமல் முடிவு பெறாது. பருப்பு வடை அல்லது உளுந்தம் வடை இவை இரண்டும் மக்கள் அதிகளவில் சாப்பிடுவார்கள். இதற்கு சாம்பார் மற்றும் சட்டினி சேர்ந்து சாப்பிடும் போது இதன் சுவையை மிஞ்சுவதற்கு எதுவும் கிடையாது.

மிளகாய் பஜ்ஜி:

ராஜஸ்தான் மாநிலத்தில் மிகவும் பிரபலமானது ஜோத்புரி மிர்ச்சி வடை அதாவது மிளகாய் பஜ்ஜி. பெரிய பச்சை மிளகாய்யை நறுக்கி எடுத்துக் கொண்டு உருளைக்கிழங்கு மற்றும் கடலை மாவுடன் சேர்த்து வறுத்தெடுக்கும் போது இதன் சுவைக்கு அளவே இருக்காது. இதனால் தான் ராஜஸ்தானில் உள்ள முக்கியமான தெருக்களில் இந்த வடை அதிகளவில் விற்பனையாகிறது.

பருப்பு வடை :

இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மிகவும் பிரபலமான சிற்றுண்டிகளில் இதுவும் ஒன்று. இந்த பருப்புகள் சேர்த்து செய்யும் போது சாப்பிடுவதற்கு மொறுமொறுப்பாகவும், உட்புறம் மென்மையாகவும் இருப்பது இதன் கூடுதல் சுவையாகும். அதுவும் புதினா அல்லது மல்லி போன்ற பச்சை சட்னியுடன் பரிமாறும் போது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். தக்காளி சாஸுடனும் இதனைச் சாப்பிடலாம்.

உருளைக்கிழங்கு போண்டா:

இந்தியாவில் அனைத்து சீசன்களில் மக்களிடம் பிரபலமாகியுள்ளது உருளைக்கிழங்கு போண்டா. கடலை மாவு மசாலா மற்றும் உருளைக்கிழங்கு மசித்து செய்யும் இந்த போண்டாக்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானது. பொன்னிறமாக வறுத்தெடுத்து கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிடுவது வழக்கம். இது மகாராஷ்டிராவில் உள்ள சிற்றுண்டிகளில் அதிகளவில் விற்பனையாகிறது.

கீரை அல்லது கிழங்கு வடை :

மகாராஷ்டிரா மாநில சிற்றுண்டிகளில் விற்பனையாகும் மற்றொரு வடைகளில் ஒன்று கீரை வடை அதாவது சபுடானா வடை. பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த மரவள்ளிக்கிழங்கு மற்றும் பல மசாலாப் பொருள்களைக் கொண்டு தட்டைப் போன்று தயாரிக்கப்படும் இந்த வடை நவராத்திரி விரதங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதில் கொத்தமல்லி மற்றும் மசித்த உருளைக்கிழங்குகளும் சேர்க்கப்படுகிறது.இந்த வடைகள் மிகவும் பிரபலமாகி இருந்தாலும், வீட்டில் என்ன பொருள்கள் இருந்தாலும், அதை வைத்து வடைகள் செய்யும் திறனை பெற்றுள்ளார்கள் இந்திய தாய்மார்கள் என்பது தான் நிதர்சன உண்மை.

Related Posts

Leave a Comment