நெல்லையில் வேகமாக பரவி வரும் “மெட்ராஸ் ஐ” ..

by Editor News

மழைக் காலங்களில் அதிகம் பரவும் நோய்களில் ஒன்றான மெட்ராஸ் ஐ தோற்று நோயாக பார்க்கப்படுகிறது. விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றான இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து பிறருக்கும் பரவும்.

கடந்த சில நாட்களாக சென்னையில் மெட்ராஸ்-ஐ நோய் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த கவனத்துடனும் பாதுகாப்புடனும் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். இது படி படியாக பரவி நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தற்போது நெல்லையில் கடந்த இரண்டு நாட்களில் 800 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். நோய் பாதிப்பு ஏற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாய விடுப்பு எடுத்து கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment